தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடி, மின்னலுடன் மழை ஏற்காடில் 'குளுகுளு'

இடி, மின்னலுடன் மழை ஏற்காடில் 'குளுகுளு'

இடி, மின்னலுடன் மழை ஏற்காடில் 'குளுகுளு'


ADDED : அக் 01, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: ஏற்காடில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக காணப்-பட்ட நிலையில் மதியம், 12:00 மணிக்கு வெயில் அடிக்க தொடங்கியது. தொடர்ந்து, 2:10 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுப்-பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து, 45 நிமிடம் கொட்டி தீர்த்தது.

பின் சாரல் மழையாக மாறி, 3:20 மணி வரை பெய்து சற்று ஓய்ந்-தது. தொடர்ந்து, 4:10 மணிக்கு வெயிலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கி, 5:30 மணி வரை பெய்தது. அப்போது சுற்-றுலா பயணியர் கண்டு ரசித்தனர். பின்னர், 6:15 மணிக்கு மீண்டும் இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கி, ஒன்றரை மணி நேரம் பெய்தது. மழையால், 'குளுகுளு' என ஏற்காடு மாறி-யது.அதேபோல் வாழப்பாடி சுற்றுவட்டார

பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு, 8:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்தது. தொடர்ந்து வாழப்பாடி, துக்கியாம்பாளையம், பழனியாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம், சேசன்சாவடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட பகுதியில் காற்று, இடியுடன் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us