/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்முறை சமூக தணிக்கையில் சத்துணவு திட்டம்: முறைகேடு களைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
முதல்முறை சமூக தணிக்கையில் சத்துணவு திட்டம்: முறைகேடு களைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
முதல்முறை சமூக தணிக்கையில் சத்துணவு திட்டம்: முறைகேடு களைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
முதல்முறை சமூக தணிக்கையில் சத்துணவு திட்டம்: முறைகேடு களைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : ஜூலை 05, 2024 01:06 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும், 1,823 பள்ளி-களில், 2,22,530 மாணவ, மாணவியர் சத்துணவு உட்கொள்கின்-றனர். இதில் மாணவர்கள், 1,15,205; மாணவியர், 1,07,325 பேர் அடங்கும். இவர்களுக்கு மத்திய அரசு பங்களிப்பாக, 60 சத-வீதம், மாநில அரசு பங்களிப்பாக, 40 சதவீத நிதி ஒதுக்கீடு செய்-யப்படுகிறது.
ஆனால் இந்நிதி முறையாக கையாளப்படுவதில்லை என்றும், பல்வேறு முறைகேடு, குளறுபடி நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனால் சத்துணவு திட்டப்பணிகளை சமூக தணிக்கை செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை-களை வெளியிட்டு, தமிழகம் முழுதும் அதற்கான பணி மேற்-கொள்ளப்பட்டது. அதன்படி மாவட்டத்தில், 500க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் சத்துணவு உட்கொள்ளும், 36 பள்ளி மையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இரு நடுநிலை, மற்-றவை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மையங்கள். அங்கு கடந்த 1ல், தொடங்கிய சமூக தணிக்கை, இன்று வரை முதல் சுற்றா-கவும், அடுத்து, 8 முதல், 12 வரை, இரண்டாம் சுற்றாகவும், சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வட்டார வளமைய பயிற்றுனர் தலை-மையில் பெற்றோர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர், உள்ளாட்சி பிர-திநிதி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் என, ஒரு பள்ளிக்கு குறைந்தது, 7 முதல், 9 பேர் அடங்கிய குழுவினர், சமூக தணிக்-கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்துணவு உட்கொள்ளும் குழந்தைகளை தனித்தனியே அழைத்து உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா, போதிய அளவில் கிடைக்கிறதா, சுகாதாரமாக சமைக்கப்படுகிறதா, உங்களிடம் சத்-துணவு அமைப்பாளர், ஆயாக்களின் அணுகுமுறை; நடவடிக்கை எப்படி உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெறுகின்றனர். அத்துடன் சத்துணவு வருகை பதிவேடு - பள்ளி வருகை பதி-வேட்டை ஒப்பிட்டு உணவு பெறும் மாணவ, மாணவியர் வருகை சரிபார்க்கப்படுகிறது. அதேபோல் மாணவ, மாணவி-யரின் பெற்றோரிடமும் சத்துணவு பற்றி விசாரிப்பதோடு, பிள்-ளைகளின் மனநிலையில் சத்துணவு எப்படி உள்ளது என கேட்ட-றிந்து பதில் பெறுகின்றனர். இதன் அறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.