/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடி மகப்பேறு மருத்துவர் வாரம் 2 நாள் ஏற்காடு வர உத்தரவு
/
இடைப்பாடி மகப்பேறு மருத்துவர் வாரம் 2 நாள் ஏற்காடு வர உத்தரவு
இடைப்பாடி மகப்பேறு மருத்துவர் வாரம் 2 நாள் ஏற்காடு வர உத்தரவு
இடைப்பாடி மகப்பேறு மருத்துவர் வாரம் 2 நாள் ஏற்காடு வர உத்தரவு
ADDED : அக் 14, 2024 05:00 AM
ஏற்காடு: ''இடைப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர், வாரத்தில் இரு நாட்கள் ஏற்காடு மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில், சுகாதாரத்-துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மருத்துவம-னையில் உள்ள வசதிகள் குறித்து, மருத்துவ அலுவலர் குமார் செல்வத்திடம் கேட்டறிந்தார்.
மேலும் ஏப்ரலில் இருந்து ஒரு பிரசவம் கூட ஆகாதது ஏன் என, கேள்வி எழுப்பினர். அதற்கு மருத்துவ அலுவலர், 'இந்த மருத்து-வமனை மகப்பேறு மருத்துவர் மகப்பேறு விடுப்பில் உள்ளார்.
இதனால் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர், வாரம் ஒருநாள் வந்து செல்கிறார்' என்றார். அதற்கு அமைச்சர், 'இனி அந்த மருத்துவர், வாரம் இரு நாட்கள் ஏற்காடு மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டும்' என அறிவுறுத்-தினார். ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து கொண்டையனுார், மலைக்கிரா-மத்துக்கு சென்ற அமைச்சர், 'மக்களை தேடி மருத்துவம்' குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.பின், வேலுார் ஊராட்சி கொடை-யானுார் மலைக்கிராம த்துக்கு சென்ற அமைச்சர், கரடு முரடான பாதையில் இறங்கி மக்களை சந்தித்தார். அப்போது, 'மக்களை தேடி மருத்துவ குழுவினர்' தங்கள் கிராமத்துக்கு வருகின்றனரா, 'உங்களுக்கு நல்ல முறையில் மருத்துவம் பார்க்கிறார்களா' என கேட்டறிந்தார். தொடர்ந்து மக்கள், சாலை வசதி கேட்டனர். அதற்கு அவர், ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.
ஓமலுாரில் ஆய்வு
முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம், சேலம் வந்த அமைச்சர் சுப்பிரமணியத்தை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின் அமைச்சர், ஓமலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
குறிப்பாக புறநோயாளிகள், மருந்து வழங்கும் இடம், பிரசவ வார்டு, ஆர்த்தோ, அவசர சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் சிகி ச்சை குறித்து கேட்ட-றிந்தார். நோயாளியின் உறவினர்களிடமும் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்-துவ அலுவலர்
ஹெலன்குமார் உடனிருந்தனர்.