/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கோட்ட ரயில்களில் 'ஓசி' பயணம் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம்

ADDED : ஜன 04, 2025 07:19 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், தொடர்ந்து ரயில்கள், ஸ்டேஷன்களில் பரிசோதனை நடத்தி வரு-கின்றனர். அதில் கடந்த டிசம்பரில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த, 13,152 பேரிடம், 1.10 கோடி ரூபாய், முறையான டிக்கெட் இன்றி பயணித்த, 16,933 பேரிடம், 85.05 லட்சம் ரூபாய், பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்ற, 99 பேரிடம், 52,000 ரூபாய் என, 1.96 கோடி ரூபாய் அபராதம் வசூ-லிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம், 9.79 கோடி, முறையான டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம், 6.04 கோடி, பதிவு செய்யப்ப-டாமல் கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்றவர்களிடம், 3.24 லட்சம் என, 15.88 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.