/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் கஞ்சா கடத்தல் ஒடிசாவை சேர்ந்தவர் கைது
/
பஸ்சில் கஞ்சா கடத்தல் ஒடிசாவை சேர்ந்தவர் கைது
ADDED : நவ 21, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், பள்ளப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் இரவு, புது பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை கண்காணித்தனர். அவர், கோவை செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.
பின் அவர் வைத்திருந்த பையை, போலீசார் சோதனை செய்தபோது, 10 கிலோ கஞ்சா இருந்தது. அவரிடம் விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பர்புலால், 48, என்பதும், அங்கிருந்து கஞ்சாவை கடத்தி, கோவைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

