/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த ஒடிசா தொழிலாளி பலி
/
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த ஒடிசா தொழிலாளி பலி
ADDED : ஆக 22, 2025 01:51 AM
மோகனுார், மோகனுார் அருகே, ஆட்டோலில் இருந்து தவறி விழுந்த ஒடிசா மாநில தொழிலாளி பலியானார்.
மோகனுார் அடுத்த கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மங்காடுபிந்தானி, 23, என்பவர் தனது மனைவியுடன் நாமக்கல் சென்று விட்டு, அணியாபுரத்தில் இருந்து கே.புதுப்பாளையம் செல்ல நின்று கொண்டிருந்தார்.
அப்போது வந்த ஆட்டோவில் ஏறி, கே.புதுப்பாளையம் வரும்போது, தோளுரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக, மங்காடுபிந்தானி ஆட்டோவை நிறுத்த சொல்லி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து கோழிப்பண்ணை மேலாளர் விக்னேஷ், 29, அளித்த புகார்படி மோகனுார் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், எஸ்.ஐ., மோகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

