/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியையிடம் அத்துமீறிய புகாரால் அலுவலர் விசாரணை
/
ஆசிரியையிடம் அத்துமீறிய புகாரால் அலுவலர் விசாரணை
ADDED : ஜூன் 20, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், நங்கவள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் மாரியப்பன், சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் அவதுாறாக பேசியதாக, முதல்வரின் தனி பிரிவுக்கு, முதுகலை தமிழ் ஆசிரியை புகார் அனுப்பினார்.
இதுகுறித்து விசாரிக்க, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயிலுக்கு, முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார். இதன்படி, ஆசிரியை, மாணவியர், மாரியப்பன் ஆகியோரிடம், நேற்று இஸ்மாயில் விசாரித்தார். இவர் அறிக்கை அளித்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.