/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைகளில் எண்ணெய் பயன்பாடு அதிகாரிகள் ஆய்வுக்கு வலியுறுத்தல்
/
கடைகளில் எண்ணெய் பயன்பாடு அதிகாரிகள் ஆய்வுக்கு வலியுறுத்தல்
கடைகளில் எண்ணெய் பயன்பாடு அதிகாரிகள் ஆய்வுக்கு வலியுறுத்தல்
கடைகளில் எண்ணெய் பயன்பாடு அதிகாரிகள் ஆய்வுக்கு வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2025 03:18 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், சந்தைப்பேட்டை, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில்லி சிக்கன், மீன் வறுவல், மானா இறைச்சி மற்றும் வடை, போண்டா, பஜ்ஜி கடைகள் ஏரா-ளமாக உள்ளன.
அங்குள்ள கடைகளில் பலமுறை பயன்படுத்திய எண்ணெயை மாற்றாமல், தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் கருப்பு நிறமாகியும் கூட மாற்றுவதில்லை. அதில் மேலும் எண்ணெய் சேர்த்து பலகாரம், சில்லி சிக்கன் தயாரித்து விற்கப்படுகின்றன. தரமற்ற எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும் குழந்தைகள், பெரிய-வர்கள், வாந்தி, வயிறு உபாதைகளால் பாதிக்கின்றனர். அதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.