/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆயில் கொட்டியதால் புது பெட்டி பொருத்தம்
/
ஆயில் கொட்டியதால் புது பெட்டி பொருத்தம்
ADDED : ஜூலை 24, 2025 01:47 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில் மின்மாற்றி உள்ளது. அதன் ஆயில் பெட்டியில் இருந்து கசிந்து வெளியேறியது. தவிர, மின் ஒயர் உரசி தீப்பொறி
ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் தகவல்படி, தம்மம்பட்டி மின்வாரிய அலுவலர்கள் விரைந்து சென்றனர். அப்போது ஆயில் கொட்டிக்கொண்டிருந்ததை பார்த்து, அதன் பெட்டியை அகற்றிவிட்டு, புதிதாக வேறு பெட்டி பொருத்தினர். இச்சம்பவத்தால், 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டது.
மின் அலுவலர்கள் கூறுகையில், 'டிரான்ஸ்பார்மரில் மீட்டருக்கு செல்லும் ஒயர், 'கட்' ஆனதால், ஆயில் பெட்டியில் ஓட்டை விழுந்துள்ளது. தகவல் அறிந்ததும் வேறு டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டது' என்றனர்.