/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச மின் இணைப்பு கேட்டு கூடுதல் கலெக்டர் கார் முன் மூதாட்டி தர்ணா
/
இலவச மின் இணைப்பு கேட்டு கூடுதல் கலெக்டர் கார் முன் மூதாட்டி தர்ணா
இலவச மின் இணைப்பு கேட்டு கூடுதல் கலெக்டர் கார் முன் மூதாட்டி தர்ணா
இலவச மின் இணைப்பு கேட்டு கூடுதல் கலெக்டர் கார் முன் மூதாட்டி தர்ணா
ADDED : நவ 05, 2024 06:44 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகா, மானத்தாள் கிராமம் அருகே ஓலப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா, 70. இவரது மகன் சசி-குமார், 38. நேற்று இருவரும் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்-தனர். அப்போது மூதாட்டி, திடீரென கலெக்டர் அலுவலக வளா-கத்தில் நிறுத்தப்பட்டிருந்த, கூடுதல் கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர் கார் முன் படுத்து உருண்டார். கலெக்டர் வந்து பதில் சொல்ல வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தார். தகவலறிந்த அதிகாரிகள், மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மூதாட்டி பாப்பா கூறுகையில்,'' எனக்கு சொந்த-மான, 1.5 ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கரில் விவசாயம், குடிநீருக்-காக ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் இணைப்பு செய்யப்-பட்டுள்ளது. விவசாயத்திற்கு இலவச மின் இனைப்பு கேட்டு, கடந்த இரு ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க-வில்லை. கலெக்டர் கையொப்பம் இருந்தால் உடனடியாக இல-வச மின் இணைப்பு தருவதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். இது குறித்து அமைச்சர் உள்ளிட்ட, பல்வேறு அதிகாரிகளை சந்-தித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இலவச மின் இணைப்பு வழங்கினால்தான், இந்த இடத்தை விட்டு நகர்வேன்,'' என்றார்.உரிய விசாரணை நடத்தி, மின் இணைப்பு பெற்று தருவதாக கூறியதையடுத்து, அதிகாரிகளுடன் மூதாட்டி சென்றார்.

