ADDED : பிப் 28, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: நரசிங்கபுரம், பழைய உடையம்பட்டியை சேர்ந்த சகாதேவன் மனைவி மாரியம்மாள், 65. கடந்த, 9ல், வலசக்கல்பட்டியில் சமையல் வேலைக்கு சென்றார். அப்போது சூடாக இறக்கி வைத்த ரசம் பாத்திரத்தில் உரசியதில், அவர் மீது கொட்டியது.
இதில் படுகாயமடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

