ADDED : ஆக 02, 2025 02:22 AM
சங்ககிரி:மா டு வாங்கி தருவதாக மூதாட்டியை அழைத்துச்சென்று, அவரது தலையை தனியே துண்டித்து படுகொலை செய்த வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.
சேல ம் மாவட்டம், சங்ககிரி, வை குந்தம் அருகே வெள்ளையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னபொண்ணு, 70. இவரது கணவர் இறந்துவிட்டார். சின்னபொண்ணு, அதே பகுதியைச் சேர்ந்த மாடு வியாபாரி ஏழுமலை யிடம், மாடு வாங் கி தரும்படி கே ட்டுள்ளார்.
அவர், கொங்கணாபுரத்தில் வாங்கி தருவதாக கூறி, ஜூலை 23 காலை இருசக்கர வாகனத்தில் சின்னபொண்ணுவை அழைத்துச்சென்றார். மாலை ஏழுமலை மட்டும் வீடு திரும்பினார்.
சி ன்னபொண்ணு மகன் மதியழகன் கேட்டபோது, 'சின்னபொண்ணு மகுடஞ் சாவடியில் உள்ள உன் சகோதரி வீட்டுக்கு பஸ்சில் அனுப்பிவிட்டேன்' என, ஏழுமலை தெரிவித்தார்.
மதியழகன், சகோதரி வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, சின்னபொண்ணு வராதது தெரிந்தது. பல்வேறு இடங்களி ல் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் மதியழகன், சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதற்குள் ஏழுமலையின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆனதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.
போலீ சார் ஏழுமலையை பிடித்து விசாரித்ததில், தாரமங்கலம் அருகே பவளத்தானுார் ஏரியில் சின்னபொண்ணுவை கொலை செய்து, சாக்கு பையில் கட்டி மூட்டையாக போட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்று அங்கு சென்ற போலீசார், மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில், தலை தனியாகவும், உடல் தனியாகவும் மூ ட்டையில் கிடந்தது.
ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். எதற்காக கொலை செய்தார் என, விசாரணை நடக்கிறது. பணம், நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.