நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் மோதி மூதாட்டி பலி
வாழப்பாடி, நவ. 3-
சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் புஷ்பலீலா, 68. இவர் வாழப்பாடி அருகே முத்தப்பட்டியில் உள்ள மகள் ஜோதி வீட்டுக்கு சென்றார். ஜோதிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர் பணிபுரியும், மைக்ரோ பஸ் ஸ்டாப் அருகே உள்ள தனியார் நுாற்பாலையில், ஜோதியின் விடுமுறை கடிதம் கொடுக்க, நேற்று காலை, 9:00 மணிக்கு புஷ்பலீலா சென்றார். அப்போது சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கி வந்த, 'பழனியப்பா' எனும் தனியார் பஸ் மோதியது. அதில் புஷ்பலீலா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்