/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகை போராட்டம்

ADDED : ஏப் 08, 2024 02:29 AM
ஓமலுார் சட்டசபை தொகுதியில், 1,691 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு சிக்கனம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று, 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது மதிய உணவு வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைய அலுவலர்கள், உரிய முறையில் ஏற்பாடு செய்யாத ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையறிந்து அங்கு வந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி விசாரித்தார். பின் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு பயிற்சியில் பங்கேற்றனர்.இதுகுறித்து ஓமலுார் தேர்தல் அதிகாரிகள் கூறுகையில் 'சாப்பாடு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது' என்றனர்.