/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சங்ககிரி விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்ற இரவு காவலாளி பலி
/
சங்ககிரி விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்ற இரவு காவலாளி பலி
சங்ககிரி விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்ற இரவு காவலாளி பலி
சங்ககிரி விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் எரிந்து நாசம் மொபட்டில் சென்ற இரவு காவலாளி பலி
ADDED : நவ 10, 2024 02:54 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் தீயில் எரிந்து நாசமானது. மொபட்டில் சென்ற முதியவர் பலியானார். பஸ்சில் பயணித்த, 8 பயணியர் காயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு, 44 பயணியருடன், 'கிருஷ்ணா' என்ற தனியார் ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. டிரைவர் அசோக்குமார் ஓட்டினார். சேலத்தில் பயணியரை இறக்கிவிட்ட பின், 20க்கும் மேற்பட்டோ-ருடன் பஸ் கோவைக்கு சென்றுகொண்டிருந்தது.
நேற்று காலை, 6:30 மணிக்கு சங்ககிரி அருகே கலியனுாரில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் சென்றுகொண்டிருந்த, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட் மீது மோதியது.
டிரைவர், பஸ்சை சாலைக்கு திருப்ப முயன்றார். ஆனால், பஸ் ஒருபுறம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அதில் இருந்த பயணியர், ஜன்னல்கள் வழியே குதித்து வெளியே வந்தனர். இருப்பினும் பஸ் தீப்பற்றி எரியத்தொடங்கியது. சங்ககிரி தீய-ணைப்புத்துறை வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தீயணைப்பு வாக-னமும் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், பஸ் மோதியதில் மொபட்டில் சென்ற சங்ககிரி, சின்னா-கவுண்டனுார், வீரபாண்டி நகரை சேர்ந்த பெரியசாமி,60, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு-வரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் ஆய்வு செய்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.
தப்பிய டிரைவர்
இதுகுறித்து போலீசார்
கூறியதாவது:
இறந்த முதியவர், ஐவேலியில் உள்ள லாரி பட்டறையில் இரவு காவலாளியாக பணிபுரிந்ததும், பணி முடிந்து வீடு திரும்பும்-போது விபத்தில் சிக்கியதும் தெரிய
வந்துள்ளது. தீப்பற்றியதில் பஸ்
முற்றிலும் எரிந்துவிட்டது. பஸ்சில் பயணித்தவர்களின் மடிக்க-ணினிகள், மொபைல் போன்கள், துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்துவிட்டன.
இதில் கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த ஜெபின், 33, குனிய-முத்துார் முகமது அனீஷ், 25, அவிநாசி முகமது சிராஜூதீன், 30, சென்னை தசரதன், 30, ரோஹினிபிரியா, 32, வைத்தீஸ்வரன், 57, அரக்கோணம் இவாஞ்சலின், 34, திண்டுக்கல், அரியநல்லுார் சேவியர்ராஜ், 34, ஆகியோர் காயமடைந்து சங்ககிரி அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் டிரைவர், அந்த வழியே சென்ற வேறு ஒரு பஸ்சில் ஏறி தப்பியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை தேடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.