/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
29ல் மக்கள் குறை கேட்க 33 வார்டுகளிலும் கூட்டம்
/
29ல் மக்கள் குறை கேட்க 33 வார்டுகளிலும் கூட்டம்
ADDED : அக் 25, 2025 01:10 AM
ஆத்துார், ஆத்துார் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளிலும், வரும், 29ல், மக்கள் குறைகேட்க, சிறப்பு வார்டு கூட்டம் நடக்க உள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறியதாவது:
ஆத்துார் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில் வரும், 29 காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் மக்கள், வார்டில் உள்ள குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுது, பூங்கா பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் குறைபாடு இருந்தால் தெரிவிக்கலாம்.
மக்கள் தெரிவிக்கும் பிரதான, 3 கோரிக்கைகள், அரசுக்கு அனுப்பி விரைவில் தீர்வு காணப்படும். சமுதாயக்கூடம், திருமண மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், 33 வார்டுகளிலும், கூட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

