/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 19ல் யாகசாலை பூஜை தொடக்கம்
/
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 19ல் யாகசாலை பூஜை தொடக்கம்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 19ல் யாகசாலை பூஜை தொடக்கம்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 19ல் யாகசாலை பூஜை தொடக்கம்
ADDED : ஜன 13, 2024 04:02 AM
சேலம்: சேலம், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, வரும், 19 காலை, 8:00 மணிக்கு, பஞ்சகவ்ய பூஜை, கணபதி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி, காளி நவக்ரஹ அஷ்டபந்த திரவிய ேஹாமத்துடன் யாக சாலை பூஜை தொடங்க உள்ளது.
தொடர்ந்து தீர்த்தக்குட ஊர்வலம், மாலை, 5:00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடக்க உள்ளது. 20ல் ஈஸ்வரி தேவிக்கு, 2ம் கால யாக பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம், கோபுர கலசம் நிர்மானித்தல்; மாலையில், 3ம் கால யாக பூஜை, இரவில் யந்திரம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்க உள்ளது. 21 அதிகாலை, 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கலச புறப்பாடு, விநாயகர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, பிரம்ம துர்க்கை, காளியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.