/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீண்டும் சிறுத்தை காலடி தடம் கெங்கவல்லி மக்கள் கலக்கம்
/
மீண்டும் சிறுத்தை காலடி தடம் கெங்கவல்லி மக்கள் கலக்கம்
மீண்டும் சிறுத்தை காலடி தடம் கெங்கவல்லி மக்கள் கலக்கம்
மீண்டும் சிறுத்தை காலடி தடம் கெங்கவல்லி மக்கள் கலக்கம்
ADDED : நவ 10, 2024 02:54 AM
கெங்கவல்லி: சிறுத்தை காலடி தடம் மீண்டும் பதிவாகியுள்ளதால் கெங்கவல்லி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை வனப்பகு-தியில் கடந்த செப்டம்பரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. பச்சமலை ஊராட்சி கீழ் பாலத்தங்கரையில், 3 மாடுகள் கொல்லப்பட்டன. இதனால் வனத்துறையினர் கண்கா-ணிப்பு கேமரா பொருத்தி வழித்தடம், காலடி விபரங்களை சேக-ரித்தனர். அப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதிப்ப-டுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் கெங்கவல்லி அருகே, வலசக்கல்பட்டி வனப்பகுதியில், சிறுத்தை காலடி தடம் பதிவாகி இருந்ததால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தவிர எடப்பாடியில் ஒரு மாட்டை கொன்றதாக, மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பச்சமலை வனப்பகுதி, அடி-வார பகுதிகளில், சிறுத்தை காலடி தடம் உள்ளது. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காலடி தடம் பதிவான பகுதியில் ஆய்வு செய்யப்படுகிறது' என்றனர்.