/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒண்டிக்கடை - ஜருகுமலை அடிவாரம் தார்ச்சலை அமைக்கப்படுமா?
/
ஒண்டிக்கடை - ஜருகுமலை அடிவாரம் தார்ச்சலை அமைக்கப்படுமா?
ஒண்டிக்கடை - ஜருகுமலை அடிவாரம் தார்ச்சலை அமைக்கப்படுமா?
ஒண்டிக்கடை - ஜருகுமலை அடிவாரம் தார்ச்சலை அமைக்கப்படுமா?
ADDED : நவ 16, 2024 01:36 AM
ஒண்டிக்கடை - ஜருகுமலை அடிவாரம்
தார்ச்சலை அமைக்கப்படுமா?
பனமரத்துப்பட்டி, நவ. 16-
பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு கோம்பைக்காட்டில் ஜருகுமலை தொடரின் அடிவாரத்தில், மக்கள் வசிக்கின்றனர். சேலம் - பனமரத்துப்பட்டி சாலை, ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஜருகுமலை அடிவாரத்துக்கு மழை நீர் ஓடை, மண் பாதை வழியே மக்கள் செல்கின்றனர்.
அப்பாதையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி கடந்த மாதம் பனமரத்துப்பட்டியில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனிடம் மக்கள் மனு அளித்தனர். அதுகுறித்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள், 13வது வார்டில் தார்ச்சாலை அமைப்பதற்கான சாத்திக்கூறு குறித்து கள ஆய்வு செய்தனர். வருவாய்த்துறையினர், 'சர்வே' செய்து நிலத்தை ஒதுக்கி கொடுத்த பின், சாலை அமைக்கப்படும் என, தெரிவித்தனர்.