ADDED : ஜன 02, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், 48, சந்-திரசேகர், 40. நேற்று முன்தினம் மாலை, உடையாப்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்-தனர். தாதகாப்பட்டியை சேர்ந்த டிரைவர் கோபி ஓட்டினார்.
நாமமலை பைபாஸ் சாலையில் வந்தபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மக்கள், அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு செந்தில்குமார் உயிரிழந்தார். அம்மபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் மது அருந்தி விட்டு கோபி ஆட்டோ ஓட்டியது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.