/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரிக்கு கிரீஸ் அடித்தபோது ஹைட்ராலிக் இறங்கி ஒருவர் பலி
/
லாரிக்கு கிரீஸ் அடித்தபோது ஹைட்ராலிக் இறங்கி ஒருவர் பலி
லாரிக்கு கிரீஸ் அடித்தபோது ஹைட்ராலிக் இறங்கி ஒருவர் பலி
லாரிக்கு கிரீஸ் அடித்தபோது ஹைட்ராலிக் இறங்கி ஒருவர் பலி
ADDED : ஆக 14, 2025 03:37 AM
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே, வடுகப்பட்டி ஜெயம் கார்டனை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் மணி, 39; லாரி பட்டறை நடத்தி வந்தார். இவர், நேற்று காலை, 9:00 மணிக்கு, பட்டறைக்கு சர்வீஸ் செய்ய வந்த டிப்பர் லாரியின் ஹைட்ராலிக்கை மேலே ஏற்றிவிட்டு, கிரீஸ் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஹைட்ராலிக் கீழே இறங்கி, கிரீஸ் அடித்துக்கொண்டிருந்த மணி மீது விழுந்தது.
இதில், மணி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் மணியின் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து மணியின் மனைவி நதியா, 35, கொடுத்த புகார்படி, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.