/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார் ேஷாரூமில் ரூ.21 லட்சம் கொள்ளை மகாராஷ்டிரா கும்பலில் ஒருவர் கைது

ADDED : நவ 15, 2024 02:23 AM
கார் ேஷாரூமில் ரூ.21 லட்சம் கொள்ளை
மகாராஷ்டிரா கும்பலில் ஒருவர் கைது
சேலம், நவ. 15-
கார் ேஷாரூமில், 21 லட்சம் ரூபாய் கொள்ளையில், மகாராஷ்டிரா கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் ஒருவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடுகின்றனர்.
சேலம், கந்தம்பட்டி அருகே தனியார் கார் விற்பனை நிறுவனம் உள்ளது. அங்கு கடந்த, 7 இரவு, 21.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 6 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் வந்த பைக் எண்ணை வைத்து விசாரித்ததில், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என தெரிந்தது.
இதனால் தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா சென்று, அதே பகுதியை சேர்ந்த அபிசேக் தேவராம் மோதி, 26, என்பவரை பிடித்து விசாரித்தபோது, கார் ேஷாரூம் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை சேலம் அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், அவர் உள்பட, 5 பேர் மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூரூ வந்து பின் சேலம் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால் அபிசேக் தேவராம் மோதியை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடுகின்றனர்.