/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கட்டுமான பணி பாதிக்கும் அபாயம்
/
தொடரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கட்டுமான பணி பாதிக்கும் அபாயம்
தொடரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கட்டுமான பணி பாதிக்கும் அபாயம்
தொடரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கட்டுமான பணி பாதிக்கும் அபாயம்
ADDED : ஜன 30, 2025 05:15 AM
ஓசூர்: தமிழக மற்றும் கர்நாடகா மாநில எல்லையில், 1,500க்கும் மேற்-பட்ட லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக எல்லையான ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிரசர்களின் உரிமையாளர்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை டன்னுக்கு, 120 முதல், 200 ரூபாய் வரையும், பி.சாண்ட் விலையை, 225 ரூபாய் வரையும் உயர்த்தியுள்ளனர். லாரி உரிமையாளர்கள் நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விலையை குறைக்கவில்லை. சில கிரசர் உரிமையாளர்கள் தங்க-ளது லாரிகள் மூலம், கர்நாடகா மாநிலத்திற்கு பழைய விலைக்கே கட்டுமான பொருட்களை கொண்டு சென்று வழங்கி வருகின்-றனர்.இதனால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள லாரி உரிமையாளர்கள் கடந்த, 27 முதல், கால-வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 1,500 க்கும் மேற்பட்ட லாரிகளை, அதன் உரிமையாளர்கள் லாரிகளை ஆங்காங்கு நிறுத்தி விட்டு, கிரசர்களில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்றவற்றை ஏற்றாமல் உள்ளனர். கிரசர் உரிமையாளர்கள் அழைத்து பேசி, எழுத்துப்பூர்வமாக சுமுகமான முடிவு எட்டும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்-ளனர்.
இதனால், தமிழக எல்லையான ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகு-திகள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்திலும் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் ஹாலோ பிளாக் கற்கள் தயார் செய்யும் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலையிழக்கும் நிலை உருவாகி-யுள்ளது.