/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தமிழ் புதல்வன்' திட்டத்தில் இணைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
'தமிழ் புதல்வன்' திட்டத்தில் இணைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
'தமிழ் புதல்வன்' திட்டத்தில் இணைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
'தமிழ் புதல்வன்' திட்டத்தில் இணைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 27, 2024 01:25 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 'புதுமைப்பெண்' திட்டத்தில், 15,629 மாணவியர், மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் படித்தவர் மட்டும் பயன்பெறுகின்றனர். தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவியர், அரசு பள்ளி, அதன் உதவி பெறும் பள்ளி-களில், 6 முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் உயர்கல்-வியில் சேரும்போது, கல்லுாரி நிர்வாகம் மாணவ, மாணவியரை, தமிழ் புதல்வன் திட்டத்தில் சேர்த்து பயன்பெறுவதற்கான நடவ-டிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதனால் மாணவ, மாணவியர் பயன்பாட்டில் உள்ள தங்கள் வங்கி கணக்கு, ஆதார் எண் உள்பட அரசால் அறிவித்துள்ள வழி-காட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணையதளத்தில் பதி-வேற்றம் செய்ய வேண்டும். அதற்குரிய பயிற்சி கல்லுாரி ஒருங்கி-ணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதி-யான மாணவ, மாணவியர் சேர்ந்து பயன்பெற நடவடிக்கை எடுக்-கப்பட்டுள்ளது என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.