/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
25ல் 3 கோரிக்கை மட்டும் பரிசீலனை:பணிக்கு திரும்பிய 'டாக்பியா' சங்கத்தினர்

ADDED : அக் 12, 2025 01:45 AM
சேலம்:தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள்(டாக்பியா) சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த நிலையில், நேற்று முன்தினம் வாபஸ் பெறுவதாக, 'டாக்பியா' தரப்பில் அறிவிக்கப்பட்டு, நேற்று அனைவரும் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், பதிவாளர் நந்தகுமார், 'டாக்பியா' பொதுச்செயலருக்கு அனுப்பிய கடித விபரம்:
உள்வரும் பொருட்களுக்கு, 'புளுடூத்' முறையை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தி அதன்மூலம் பெறப்படும் கருத்துகளை, அரசு செயலருக்கு அனுப்பி அனுமதி பெற்று, அனைத்து மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். ரேஷன் விற்பனையாளர், கட்டுனர்களின் ஊதிய உயர்வு நிர்ணயிக்க, குழு அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பி.ஓ.எஸ்., இயந்திரத்துக்கு தேவையான இணைய வழி செலவு தொகையை மாதந்தோறும் அதன் விற்பனையாளருக்கு வழங்க கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், 25 கோரிக்கையில், 3ன் மீது மட்டும் நடவடிக்கை மேற்கொள்ள பரிசீலனையில் இருப்பது தெரியவந்துள்ளது.