/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும்'
/
'சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும்'
'சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும்'
'சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும்'
ADDED : அக் 31, 2025 01:21 AM
ஆத்துார், தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார் சட்டசபை தொகுதிக்கான, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சீராய்வு குறித்து ஆலோசனை கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. அதில் மாவட்ட செயலரான, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தகுதியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும். வடமாநிலத்தவரை, வாக்காளராக சேர்க்க வேண்டாம். மேலும் கால அவகாசம் வழங்கவில்லை.
அவசரமாக பணி மேற்கொள்வதை தான் எடுத்துரைக்கிறோம். பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., ஆதரவாக இல்லாமல், தகுதியான வாக்காளர் சேர்க்க முன்வர வேண்டும்.
சேலம் கிழக்கு மாவட்டத்தில், ஆத்துார், கெங்கவல்லி, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 4 தொகுதிகளிலும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்து, சட்டசபைக்கு இந்த முறை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 2021ல் பெற்ற ஓட்டுகளை விட தலா, 70 முதல், 90 ஓட்டுகளை அதிகம் பெற வேண்டும்.
தமிழக அரசின் திட்டங்கள், அனைத்து குடும்பத்துக்கும் சென்றடைந்துள்ளன. அதனால் பெண்கள், கல்லுாரி மாணவ, மாணவியர், சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி., மலையரசன், நகர செயலர்கள் பாலசுப்ரமணியம், ராமச்சந்திரன், வேல்முருகன், ஒன்றிய செயலர்கள் செழியன், வரதராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் இடைப்பாடி சட்டசபை தொகுதிக்கு தங்காயூர் ஊராட்சி, மயைலனுாரில் நடந்தது. கொங்கணாபுரம் ஒன்றிய செயலர் பரமசிவம் வரவேற்றார்.
சேலம் எம்.பி., செல்வகணபதி பேசியதாவது:
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களை வீடுதோறும் சென்று சரிபார்ப்பார்கள். அவர்களுடன் ஓட்டுச்சாவடி முகவர்கள் தவறாமல் செல்ல வேண்டும். அதை, நகர, ஒன்றிய செயலர்கள், தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், நகர செயலர் பாஷா, ஒன்றிய செயலர்கள் நல்லதம்பி, டாடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'தி.மு.க.,வுக்கு காலைக்கதிர் ஆதரவு தர வேண்டும்'
மேலும் எம்.பி., சிவலிங்கம் பேசுகையில், ''காலைக்கதிர் நாளிதழில் தி.மு.க., குறித்து நல்ல கருத்துகளை எழுதுங்கள். காலைக்கதிர் நாளிதழும், எங்களுக்கு (தி.மு.க.,) ஆதரவு தாருங்கள். நாங்களும் உங்களுக்கு ஆதரவாகத்தான் இருப்போம். வாக்காளர் திருத்தம் குறித்த தகவலை, மக்களுக்கு, நாளிதழ்களும், எங்களுடன் எடுத்துரைக்க முன்வர வேண்டும்,'' என்றார்.

