/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹஜ் பயணியருக்கு உதவ விண்ணப்பிக்கலாம்
/
ஹஜ் பயணியருக்கு உதவ விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 31, 2025 01:21 AM
சேலம், ஹஜ் பயணியருக்கு சேவை செய்ய விரும்பும் ஆர்வலர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கைப்படி, தமிழகத்தில் இருந்து, 2026ல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணியருக்கு உதவி செய்ய, மாநில அளவில் ஹஜ் ஆர்வலர்களை, தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப உள்ளனர். அவர்கள், 2026 ஏப்., 13 முதல், ஜூலை, 5 வரை, அங்கு தங்கி பணிபுரிய வேண்டும்.
விருப்பம் உள்ள, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவ படையினர், தன்னாட்சி அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தர பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவர்கள் சவுதி அரேபியாவில் தங்கும் காலம், பணிக்காலமாக எடுத்துக்கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள், தகுதி நியமன விதிமுறைகளை அனைத்தும் மும்பை ஹஜ் கமிட்டியால் தேர்வு செய்யப்படும். ஆர்வம் உள்ளவர்கள், நவ., 3க்குள், www.hajcommittee.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

