/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாசனத்துக்கு திறந்த நீர் 170 நாளுக்கு பின் நிறுத்தம்
/
பாசனத்துக்கு திறந்த நீர் 170 நாளுக்கு பின் நிறுத்தம்
பாசனத்துக்கு திறந்த நீர் 170 நாளுக்கு பின் நிறுத்தம்
பாசனத்துக்கு திறந்த நீர் 170 நாளுக்கு பின் நிறுத்தம்
ADDED : ஜன 16, 2025 06:55 AM
மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆக., 1 முதல், டிச., 15 வரை, 137 நாட்கள், 9.5 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கடந்த ஆண்டு அணை நிரம்பியதால் முன்னதாக ஜூலை, 30ல் பாசனத்துக்கு நீர் திறந்த நிலையில், கடந்த மாதம், 13ல் நிறுத்த வேண்டும். விவசாயிகள் கோரிக்கையால், டிச., 14 முதல் நேற்று(ஜன., 15) மாலை வரை, 33 நாட்கள், பாசன நீர் திறப்பு நீடிக்கப்பட்டது. 170 நாட்களாக கால்வாயில் நீர் திறந்த நிலையில் நேற்று மாலை, 6:00 மணிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாயில் தண்ணீர் குறைந்து ஏராளமான மீனவர்கள், வலைவீசி மீன் பிடித்தனர்.