/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு
/
லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு
லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு
லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 04, 2024 11:46 AM
சேலம்: சேலம், பனமரத்துப்பட்டி பிரிவு, பைபாஸ் சாலையில், பா.ஜ.,வின் சேலம் லோக்சபா தொகுதி அலுவலகத்தை, மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின், 40 தொகுதிகளிலும் அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் அலுவலகம் சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு உறுப்பினர் சேர்க்கை மட்டுமின்றி, மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்படி பணிகள் நடக்கும். மக்கள், மத்திய அரசு திட்டங்களின் சேவையை பெற, இந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாநில தலைவரின் யாத்திரை, 3 நாட்கள் சேலத்திலும், 4 நாட்கள் தர்மபுரியிலும் நடக்கிறது. இதில் கட்சியினர் மட்டுமின்றி, மக்களும் திரளானோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் வெங்கடாச்சலம், கல்வியாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெயராமன், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, பொதுச்செயலர் ராஜேந்திரன், சேலம் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.