ADDED : ஏப் 26, 2025 01:41 AM
சேலம்:போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின், 6வது புதிய கிளை, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள போத்தீஸ் வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது. போத்தீஸ் குழும நிர்வாக இயக்குனர் ரமேஷ், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் வரவேற்பு பெற்ற, 1.5 கிலோ கொண்ட மீனாட்சி திருக்கல்யாண நகையை, அதன், 'மினியேச்சர்' வடிவமாக, 400 கிராமில் தயாரிக்கப்பட்டது.
அதை ரமேஷ், வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில், இயக்குனர்கள் வேலம்மாள், அசோக், ரமேஷின் சகோதரர்கள் போத்தி ராஜ், முருகேஷ், மகேஷ், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
போத்தீஸ் நிர்வாகத்தினர் கூறியதாவது:
இங்கு, 15,000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்ட புது ேஷாரூமில் ஆன்டிக் நகைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. திறப்பு விழா சலுகையாக, தங்கம் கிராமுக்கு, 250 ரூபாய் தள்ளுபடி, வைரம் காரட்டுக்கு, 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இச்சலுகை, அட்சய திருதியை வரை தொடரும். மேலும் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில், ஸ்வர்ண விருட்சம், ஸ்வர்ண சுபிட்சம், மாத சேமிப்பு, டிஜி கோல்டு என, சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

