ADDED : நவ 27, 2024 06:44 AM
பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பனமரத்துப்பட்டியில், வானவில் மையம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார், திறந்து வைத்தார். ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அதுகுறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதுகுறித்து வானவில் மைய பொறுப்பாளர்கள் கூறியதாவது: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், வீட்டில் இருந்து வெளியேறி தற்கொலை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தடுத்து, பாதுகாக்கப்படும். வீட்டில் இருந்து வெளியேறும் பெண்கள், இந்த மையத்துக்கு வரலாம். அவர்களின் குடும்பத்தினரை அழைத்து கலந்தாய்வு நடத்தி, சேர்த்து வைக்கப்படும். மேலும் குழந்தை திருமணத்தை தடுத்து, பெற்றோருக்கு கலந்தாய்வு நடத்தப்படும். பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கலந்தாய்வு நடத்தி உதவி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.