ADDED : ஏப் 26, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:இந்து சமய அறநிலையத்துறை, ஓமலுார் சரக ஆய்வாளர் அலுவலகம், கடைவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. 2022 - 23 சட்டசபை மானிய கோரிக்கையின்போது, புதிதாக ஓமலுார் சரக ஆய்வாளர் அலுவலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி ஓமலுார் அரசு பஸ் பணிமனை செல்லும் வழியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புது கட்டடம் கட்டப்பட்டது. நேற்று, சேலம் இணை கமிஷனர் சபர்மதி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். உதவி கமிஷனர் ராஜா,
ஆய்வாளர் கதிரேசன் உடனிருந்தனர்.

