/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; பா.ம.க., எம்.எல்.ஏ., தர்ணா
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; பா.ம.க., எம்.எல்.ஏ., தர்ணா
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; பா.ம.க., எம்.எல்.ஏ., தர்ணா
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; பா.ம.க., எம்.எல்.ஏ., தர்ணா
ADDED : ஜன 28, 2025 07:15 AM
சேலம்: சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி, செட்டிச்சாவடி ஊராட்சிகளை, சேலம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ம.க.,வை சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ., அருள் தலைமையில், இரு ஊராட்சி மக்கள் ஒருசேர நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின் அருள், நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க தோராய தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. செட்டிச்சாவடியில், 400க்கும் அதிகமாகவும், கொண்டப்பநாயக்கன்பட்டியில், 550க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்விடத்தை, மாநகராட்சியுடன் இணைத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவர். இரு ஊராட்சி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லமூப்பம்பட்டி ஊராட்சி இணைப்பை கண்டித்தும், இரண்டொரு நாளில் மனு கொடுக்கப்படும். செட்டிச்சாவடியில், குப்பையை கொட்டி எரிக்கின்றனர். அதற்காக பல போராட்டம் நடத்தியும் தடுக்க முடியவில்லை. இவ்வாறு கூறினார்.
அதன்பின், மக்களுடன் சேர்ந்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற எம்.எல்.ஏ., அருள், போலீசார் அலைகழிப்பதாக கூறி, அங்குள்ள போர்டிகோவில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து, கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தபின்,அனைவரும் கலைந்து சென்றனர்.

