/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை
/
சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை
சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை
சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை
ADDED : நவ 28, 2024 06:45 AM
நாமக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 பேருக்கு பணி நியமன ஆணை, நேற்று வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு
அலு-வலர் உள்ளிட்ட, 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சில மாதங்களுக்கு முன் நடந்தது.
இந்த தேர்வில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட வாரியாக
போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் நடந்தது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற, 25
பேருக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஏ.டி.எஸ்.பி., தன-ராசு வழங்கினார். பணி நியமன ஆணைகளை
பெற்ற அவர்கள், திருச்சி மாவட்டம், நவல்பட்டியில் உள்ள போலீஸ் அகாட-மியில், 6 மாதம் சிறப்பு பயிற்சி
பெறுவர். அதன்பின், மாவட்-டங்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என, போலீஸ்
துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.