/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அங்கீகரிக்கப்படாத 2 கட்சி ஆஜராக உத்தரவு
/
அங்கீகரிக்கப்படாத 2 கட்சி ஆஜராக உத்தரவு
ADDED : செப் 24, 2025 01:27 AM
சேலம் : அங்கீகரிக்கப்படாத இரு அரசியல் கட்சிகள், தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:நாடு முழுதும், 2019 முதல், இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தேர்தல் கமிஷனால், தமிழகத்தில் அடையாளம் காணப்பட்ட, 39 கட்சிகளில் சேலம் மாவட்டம் ஓமலுாரில் செயல்படும் தேசிய மக்கள் கழகம், மேட்டூர், சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கு, தற்போது தமிழக தலைமை தேர்தல் அலுவலர் காரணம் கேட்கும் அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.
அங்கீகரிக்கப்படாத இருஅரசியல் கட்சிகளும், அறிவிப்பில் குறிப்பிட்ட நாளில், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தலைமை செயலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி பதில் கிடைக்காதபட்சத்தில் மேற்படி கட்சி சார்பில் தெரிவிக்க கருத்து ஏதும் இல்லை என கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்