/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காசநோயாளி விபரம் தெரியப்படுத்த உத்தரவு
/
காசநோயாளி விபரம் தெரியப்படுத்த உத்தரவு
ADDED : செப் 03, 2025 02:39 AM
சேலம், செப். 3
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
'காசநோய் இல்லா இந்தியா - 2025' எனும் நிலையை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் ஆகியவை, காசநோய் உள்ளதா என பரிசோதிக்கப்படும் நபர்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட காசநோயாளிகள் குறித்த விபரங்களை உடனே பதிவு செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். அதை, www.nikshay.in என்ற இணைதளம் அல்லது உரிய படிவங்களை பூர்த்து செய்து, சம்பந்தப்பட்ட வட்டார முதுநிலை காசநோய் சிகிச்சை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தகவலுக்கு, 'துணை இயக்குனர், மருத்துவப்பணிகள், காசநோய், சேலம்' என்ற முகவரி அல்லது 73581 - 23208 என்ற எண்ணில் அழைக்கலாம்