/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
25ல் திறனாய்வு தேர்வு எழுதுவோருக்கு திருப்ப தேர்வில் விலக்கு அளிக்க உத்தரவு

ADDED : ஜன 23, 2025 06:21 AM
சேலம்: தமிழக அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாண-வியருக்கு, முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது, மாதம், 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு கல்வி-யாண்டு தேர்வு, வரும், 25ல் நடக்க உள்ளது. இதற்கு சேலம் மாவட்டத்தில், 7,191 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்-ளனர். இவர்களுக்கு, 26 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்-கப்பட்டுள்ளன. கண்காணிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலு-வலர் கபீர் தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் சேலம் மாவட்டத்தில், 10ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இதனால் முதல்வர் திறனாய்வு தேர்வில் பங்கேற்போருக்கு, ஜன., 24ல் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, கபீர் உத்தர-விட்டுள்ளார்.