/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நவ., 29 முதல் டிச., 9 வரை புத்தக திருவிழா நடத்த ஏற்பாடு
/
நவ., 29 முதல் டிச., 9 வரை புத்தக திருவிழா நடத்த ஏற்பாடு
நவ., 29 முதல் டிச., 9 வரை புத்தக திருவிழா நடத்த ஏற்பாடு
நவ., 29 முதல் டிச., 9 வரை புத்தக திருவிழா நடத்த ஏற்பாடு
ADDED : நவ 15, 2024 02:21 AM
நவ., 29 முதல் டிச., 9 வரை
புத்தக திருவிழா நடத்த ஏற்பாடு
சேலம், நவ. 15-
சேலத்தில், வரும், 29 முதல், டிச., 9 வரை புத்தக திருவிழா நடக்க உள்ளது.
சேலத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணி குறித்து, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று புது பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திடலில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: அரசு பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி வரும், 29 முதல், டிச., 9 வரை, புத்தக திருவிழா நடக்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கம் பங்கேற்கும் இத்திருவிழாவில், 180 அரங்குகள் அமைக்கப்படும். ஒவ்வொரு நாளும் பேச்சாளர்களின் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த வரலாறு, பண்பாடு, கலாசாரம், உள்ளிட்ட புத்தகங்கள் இடம்பெறும்படி, தங்கள் புத்தகங்களை வெளியிட விரும்பும் உள்ளூர் படைப்பாளர்கள், நுால் குறித்த விபரங்களுடன், 'மாவட்ட நுாலக அலுவலகம், சேரராஜன் சாலை, அஸ்தம்பட்டி' என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இத்திருவிழா, குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி, போலீஸ், பொது நுாலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணி, போக்குவரத்து உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, புத்தக திருவிழா பணிகளை செய்ய அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.