/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரசாயன கழிவு பொங்கி நுரையால் மூடப்பட்ட தரைப்பாலம்: போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் அவதி
/
ரசாயன கழிவு பொங்கி நுரையால் மூடப்பட்ட தரைப்பாலம்: போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் அவதி
ரசாயன கழிவு பொங்கி நுரையால் மூடப்பட்ட தரைப்பாலம்: போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் அவதி
ரசாயன கழிவு பொங்கி நுரையால் மூடப்பட்ட தரைப்பாலம்: போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் அவதி
ADDED : ஜன 18, 2024 02:02 PM
வீரபாண்டி : ஆற்றில் ரசாயன கழிவு அதிகளவில் கலந்து அவை பொங்கி நுரையாக வழிந்து தரைப்பாலத்தை மூழ்கடித்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி ஊராட்சி புதுப்பாளையத்தில் இருந்து அரசம்பாளையம் வழியே, நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் - ராசிபுரம் சாலையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.
அந்த வழியில் தினமும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு பஸ்கள் சென்று வருவதோடு இரு மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை கழிவுநீரில் கலக்கப்பட்ட ரசாயன கழிவால் பொங்கி எழுந்த நுரை, தரைப்பாலம் முழுதையும் மூடியது. 10 அடி உயரத்துக்கு பொங்கிய நுரையால் பாலத்தில் நடந்து கூட செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இரு மாவட்ட மக்கள், காணும் பொங்கல் கரி நாளையொட்டி குல தெய்வ கோவில்கள், உறவினர் வீடுகளுக்கு செல்ல முடியாமல், 5 கி.மீ., சுற்றி ஆட்டையாம்பட்டி வழியே சென்று சிரமத்துக்கு ஆளாகினர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது:மழைக்காலங்களில் தான் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தரைப்பாலம் மூழ்கி நுரை பொங்கி வழியும். 10 நாட்களாக மழை பெய்யாத நிலையில் ஆற்றில் நீர்வரத்து குறைந்த சூழலில் ரசாயன கழிவு அதிகளவில் கலப்பால் நுரை பொங்கி வழிந்து தரைப்பாலத்தை மூடியுள்ளது. காற்றில் பறந்து வரும் நுரை உடலில் பட்டால் அரிப்பு கொப்பளம் ஏற்படுகிறது.தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தரக்கோரி அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது நுரையால் பாலம் மூழ்கடிக்கப்பட்டதால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் பக்கத்தில் உள்ள புதுப்பாளையம் ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆற்றில் ரசாயன கழிவு கலப்பவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.