/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெளிமாநில தொழிலாளர் பதிவு: டிச., 3ல் முகாம் தொடங்கும்
/
வெளிமாநில தொழிலாளர் பதிவு: டிச., 3ல் முகாம் தொடங்கும்
வெளிமாநில தொழிலாளர் பதிவு: டிச., 3ல் முகாம் தொடங்கும்
வெளிமாநில தொழிலாளர் பதிவு: டிச., 3ல் முகாம் தொடங்கும்
ADDED : நவ 28, 2024 01:16 AM
வெளிமாநில தொழிலாளர் பதிவு: டிச., 3ல் முகாம் தொடங்கும்
சேலம், நவ. 28-
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன்(அமலாக்கம்) அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், முடிதிருத்தக நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், கல்லுாரிகள் உள்ளிட்ட இதர நிறுவனங்களில், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் அடையாள அட்டை, இதர ஆவணங்கள் பெறாமல் பல இடங்களில் பணியில் உள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களது அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களை பெற்று பணி அமர்த்த வேண்டும். அவர்களுக்கு போதிய பணி பாதுகாப்பு, குடியிருப்பு, சுகாதார வசதிகளை செய்து தர வேண்டும்.
அவர்களது விபரங்களை, தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள, labour.tn. gov.in/ism என்ற சிறப்பு வலைதள முகவரியில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படாத சூழலில், உயிரிழப்பு சம்பவங்களில் தொழிலாளர் நலத்துறை வழங்கும் சேவைகளை பெறுவதிலும், குற்றங்களில் ஈடுபட்டு சொந்த ஊர் சென்றால் அவர்கள் பற்றிய விபரங்கள் அறிவதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் நிறுவன உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்று எண் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக வரும் டிச., 3ல் தொடங்கி, 2025 ஜனவரி வரை, இளம்பிள்ளை, சீலநாயக்கன்பட்டி, சிவதாபுரம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட், ஏற்காடு, குரங்குச்சாவடி, கருப்பூர், தாரமங்கலம், ஓமலுார், மேட்டூர், ஆத்துார் ஆகிய இடங்களில் அந்தந்த தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மூலம், முகாம்கள் நடத்தப்பட உள்ளன.