/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலம் கொடுக்க உரிமையாளர் ஒப்புதல்: ஓராண்டுக்கு பின் சாலைக்கு விமோசனம்
/
நிலம் கொடுக்க உரிமையாளர் ஒப்புதல்: ஓராண்டுக்கு பின் சாலைக்கு விமோசனம்
நிலம் கொடுக்க உரிமையாளர் ஒப்புதல்: ஓராண்டுக்கு பின் சாலைக்கு விமோசனம்
நிலம் கொடுக்க உரிமையாளர் ஒப்புதல்: ஓராண்டுக்கு பின் சாலைக்கு விமோசனம்
ADDED : மார் 05, 2025 07:47 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து காந்தி நகரில் இருந்து பூ மலை கரடு வழியே அடிக்கரை சாலையுடன் சேரும் இணைப்பு சாலை உள்ளது. பூ மலை கரடு சாலையை புதுப்பிக்க, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், தனியாருக்கு ஒப்பந்தம் விட்டது. ஓராண்டுக்கு முன், பழைய சாலை தோண்டப்பட்டது. அப்போது பட்டா நிலத்தில் சாலை உள்ளது என, நில உரிமையாளர் ஆட்சேபனை தெரிவிக்க, சாலை பணி நிறுத்தப்பட்டது. அச்சாலையில் மின் கம்பம் நட்டு, தெரு விளக்கு அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. அச்சாலையை பயன்படுத்திய மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், நில உரிமையாளர் ரமணிகோபால் கூறுகையில், ''புறம்போக்கு நிலத்தில் சாலை போடுங்கள். மேலும் சாலை அமைக்க தேவையான பட்டா நிலத்தை எடுத்துக்கொள்ளவும், கவுன்சிலர் ரவிக்குமாரிடம் கூறிவிட்டேன். சாலைக்கு பட்டா நிலத்தில், 3.30 மீட்டர் கேட்டனர். நான், 4 மீட்டராக விட்டுள்ளேன்,'' என்றார்.
தி.மு.க.,வின், 9வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் கூறுகையில், ''ரமணிகோபாலிடம் பேச்சு நடத்தியதில், 4 மீ., அகலத்தில், பட்டா நிலத்தை விட்டுள்ளார். சாலை அமைக்க உள்ள இடம், 'மார்க்' செய்யபட்டுள்ளது. சர்வேயர் மூலம் அளவீடு செய்த பின், சாலை அமைத்து, தெருவிளக்கு பொருத்தப்படும்,'' என்றார்.