/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உரிமையாளர்களே தீ வைப்பு 2 குடிசைகள் எரிந்து நாசம்
/
உரிமையாளர்களே தீ வைப்பு 2 குடிசைகள் எரிந்து நாசம்
ADDED : மே 11, 2025 03:05 AM
பெ.நா.பாளையம், பெத்தநாயக்கன்
பாளையம், உமையாள்
புரத்தை சேர்ந்தவர் சேகர், 45. இவரது குடிசை வீடு, நேற்று மாலை, 4:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியினர் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 4:15 மணிக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள், வீடு, விவசாய பட்டா ஆவணங்கள் எரிந்து நாசமாகின. ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சேகர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரே வீட்டுக்கு தீ வைத்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து
விசாரிக்கிறோம்' என்றனர்.
'குடி'மகன்
வாழப்பாடி, திருமனுார், பழைய காலனியை சேர்ந்தவர் சுரேஷ், 28. இவரது குடிசை வீடு, நேற்று மதியம், 1:00 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. வாழப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் நாசமாகின. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சுரேஷ் அவரது தாயிடம் மது அருந்த பணம் கேட்டார். அவர் தராததால், தாயை தாக்கி விட்டு, சிகரெட் பற்றவைக்கும் லைட்டரில், சுரேஷ் குடிசைக்கு தீ வைத்தது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.