/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பாதம் காப்போம்' திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
/
'பாதம் காப்போம்' திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : மே 24, 2025 02:07 AM
சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், 'பாதம் காப்போம்' திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. டீன் தேவி மீனாள் தலைமை வகித்து பேசினார். அதில் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் பாதங்களில் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது, சிகிச்சை, நோய் கண்டறியும் முறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், துணை முதல்வர் செந்தில்குமாரி, பேராசிரியர்கள் சுமதி, அருள்குமரன், மருத்துவர்கள், முதுகலை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு உணர்விழப்பு, ரத்த நாள அடைப்பு பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து கால் இழப்புகளை தடுப்பதற்குரிய செயல் திட்டமே, பாதம் காப்போம்' என்றனர்.