/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
படவெட்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
படவெட்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : டிச 06, 2024 07:19 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே சித்துாரில் உள்ள, படவெட்டி அம்மன், முத்து முனியப்பன் சுவாமிகள் கோவில், 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் ராஜகோபுரம் கட்டுமானப்பணி நடந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 1ல் கிராம சாந்தியுடன் தொடங்கியது. 3ல் முதல்கால பூஜையுடன் தொடங்கிய வேள்விகள், நேற்று காலை, 4ம் கால பூஜை நடந்தது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வந்த புண்ய தீர்த்தத்தை, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். பின் அந்த நீர், கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பரம்பரை தர்மகர்த்தாக்களான பழனிசாமி, சேவி, சித்துார் அதை சுற்றியுள்ள, 12 கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.