/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல் பயிருக்கு காப்பீடு: உதவி இயக்குனர் அழைப்பு
/
நெல் பயிருக்கு காப்பீடு: உதவி இயக்குனர் அழைப்பு
ADDED : அக் 21, 2024 07:10 AM
சங்ககிரி: நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
இதுகுறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குனர் விமலா அறிக்கை: சங்ககிரி, அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், கால்வாய் பாசன நீரை பயன்படுத்தி அதிகளவில் நெல் சாகுபடி செய்கின்றனர். இந்த சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி, நிலையான வருமானம் கிடைக்க பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அப்படி இந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நெல் பயிர்க்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு, 550 ரூபாய் செலுத்த வேண்டும்.
அத்துடன் விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு சென்று தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் ஆகிய ஏதேனும் ஒன்றில் அடுத்த மாதம், 15க்குள் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும்.