ADDED : பிப் 08, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு கோம்-பைக்காடு பகுதி ஜருகுமலை தொடரின் அடிவாரத்தில் உள்ளது. அங்குள்ள விவசாயிகள், காய்கறி, பழங்கள், தானியம் பயிரிட்டு வந்தனர். ஆனால் மயில் தொல்லையால் காய்கறி, பழங்கள் பயிர் செய்வதை கைவிட்டனர். பின் மிளகாயை
பயிரிட்ட நிலையில், அதையும் மயில் கூட்டம் கொத்தி சாப்பிடுவதால், விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'காலையில் வயலுக்கு வரும் முன்னரே மயில்கள் வந்து
பயிர்களை சாப்பிட்டு கூச்சலிடு-கின்றன. நிலம், தண்ணீர் இருந்தும், காய்கறி உற்பத்தி
செய்யமுடி-யவில்லை. மிளகாய் காரமாக இருப்பதால் மயில் சாப்பிடாது என, நினைத்து பயிர்
செய்தோம். அதையும் மயில் கொத்தி சாப்பி-டுகின்றது. மயில் தொல்லையால் விவசாயம் அழியும் நிலை
ஏற்-பட்டுள்ளது' என்றனர்.