/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லால் தாக்கி பெயின்டர் கொலை: உறவினர் சிக்கினார்
/
கல்லால் தாக்கி பெயின்டர் கொலை: உறவினர் சிக்கினார்
ADDED : ஆக 17, 2025 02:24 AM

ஓமலுார்:சேலம் அருகே நிலத்தகராறில் பெயின்டரை கல்லால் தாக்கி, கொலை செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, கொங்கரப்பட்டி மேல்காட்டை சேர்ந்தவர் ஜோசப், 27, பெயின்டர்.
இவரது வீடு அருகே வசிப் பவர் உறவினர், டிரைவர் ஜார்ஜ், 43. இவர்கள் இடையே நிலப்பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு, ஜோசப், அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜார்ஜ், அவரது நண்பரான, டிரைவர் சத்தியராஜன், 48, ஆகியோர், ஜோசப்பை தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை, காட்டுப்பக்கத்தில் ஜோசப் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
தீவட்டிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்த பின், ஜார்ஜை கைது செய்தனர். தொடர்ந்து, சத்தியராஜனை தேடுகின்றனர்.
நிலப்பிரச்னை தொடர்பான தகராறில், ஜோசப் தலையில், கல்லைப்போட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.