ADDED : நவ 24, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருங்காட்சியகத்தில்
ஓவியப்போட்டி
சேலம், நவ. 24-
குழந்தைகள் தின விழாவையொட்டி, சேலம் அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது. இயற்கை காட்சி, தலைவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைப்புகளில் நடத்தப்பட்டது. ஒன்று முதல், 5ம் வகுப்பு; 6 முதல், 8ம் வகுப்பு வரை, என, இரு பிரிவாக நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுடன் சான்றிதழ் வழங்கப்படும்.
அதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் அருங்காட்சியகம் குறித்து மாணவ, மாணவியர், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் போட்டி நடத்தப்பட்டதாக, அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு தெரிவித்தார்.