/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய அலுவலகம் திறக்க கோரி ஊராட்சி தலைவர் தீ குளிக்க முயற்சி
/
புதிய அலுவலகம் திறக்க கோரி ஊராட்சி தலைவர் தீ குளிக்க முயற்சி
புதிய அலுவலகம் திறக்க கோரி ஊராட்சி தலைவர் தீ குளிக்க முயற்சி
புதிய அலுவலகம் திறக்க கோரி ஊராட்சி தலைவர் தீ குளிக்க முயற்சி
ADDED : டிச 31, 2024 07:37 AM
சேலம்: மேட்டூர் தாலுகா, மல்லிகுந்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, திடீரென தன்னை புதிய பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுப்பதாக கூறி கோஷமிட்டார். பின், மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்ற முயன்றார். பாதுகாப்பில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஓடிச்சென்று கேனை பறித்தனர்.
தொடர்ந்து செல்லம்மாவை போலீசார் விசாரித்த போது, அவர் கூறியதாவது: மல்லியகுந்தம் பஞ்சாயத்து தலைவராக எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், 35 ஆண்டுகளாக உள்ளதாகவும், தற்போது நான் பஞ்சாயத்து தலைவராக உள்ளதாக கூறினார். எனது கணவர் இரண்டு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது புதிய பஞ்சாயத்து அலுவலகம், ரூ.43 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை திறந்து உள்ளே செல்ல, என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி செயலரும் சேர்ந்து அலுவலகத்திற்கு நான் சென்று அமர்வதை தடுக்கின்றனர்.
இன்னும், 5 நாட்களே பதவி இருப்பதால் அதற்குள் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க வேண்டும் மக்கள் நலத்திட்டங்ளை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். பின்னர் போலீசார் அவரை மனு அளிக்க அனுமதி அளித்தனர்.