/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதிகாரம்
/
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதிகாரம்
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதிகாரம்
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதிகாரம்
ADDED : பிப் 04, 2025 06:42 AM
சேலம்: ஊரக உள்ளாட்சியில், மக்கள் பிரதிநிதி பதவி கடந்த, 5ல் முடிந்-தது. மறுநாள் முதல் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர்களால், 15வது நிதிக்குழு மானியம் செயல்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. மானி-யத்தை கையாள்வதற்கான தரவு, ஊரக உள்ளாட்சி இணை-யத்தில்,
'அப்டேட்' செய்யாமல் கிடப்பில் போட்டதே செயல்ப-டுத்த முடியாததற்கு காரணம்.இதனால் புது சாலை அமைத்
தல், குடிநீர், மின்விளக்கு, சுகாதாரம், சாக்கடை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்றுவது
கேள்விக்குறியானது. இதுகு-றித்து புகார் எழுந்ததால் அதற்கான பணிகள் உடனுக்குடன் முடுக்கி விடப்பட்டு,
இன்றுடன் நிறைவு பெறுவதால், மானி-யத்தை பயன்படுத்துவதற்கான அனுமதிக்கு வழி கிடைத்துவிட்-டது.
அத்துடன், மானியத்தை கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு
ஊராட்சி செயலர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறிய-தாவது: மத்திய அரசின், 15வது
நிதிக்குழு மானியத்தை விடு-விக்க, ஊராட்சி தலைவருக்கு பதில் தனி அலுவலருக்கும், துணைத்தலைவருக்கு
பதில் ஊராட்சி செயலருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஊராட்சி செயலரின் அசல் பான் கார்டு,
ஆதார், மார்பளவு புகைப்படம், மொபைல் ஆகியவை, இணையத்தில் பதிவேற்றும் பணி, சேலம் மாவட்டத்தில்
கடந்த, 30ல் தொடங்கி, இதுவரை, 17 ஒன்றியத்தில் முடிந்துள்ளது.பிப்., 3ல்(நேற்று), தலைவாசல்,
பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஒன்றி-யத்தில் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பின் செயல்-பாட்டுக்கு
வரும் இணைய சேவை மூலம், ஊராட்சி செயலரை அடுத்து, தனி அலுவலர் ஒப்புதல் வழங்கி, மானியத்தை
விடு-வித்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றலாம். மண்டல துணை பி.டி.ஓ., பணிகளை ஆய்வு செய்து,
அவரே மானியத்-துக்கு ஒப்புதல் அளிப்பது என்பது நேர்த்தியாக இருக்காது என்-பதால், அவருக்கு பதில் ஊராட்சி
செயலருக்கு அதிகாரம் வழங்-கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

